Sad Quotes in Tamil

0
19

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

இறந்தகாலமும் எதிர்காலமும் உங்களுக்கு வேதனை ஏற்படுத்த முடியாது, ஏனென்றால் அவ்விரண்டும் இப்போது இல்லை. நீங்கள் வேதனைப்படுவது உங்கள் நினைவுகளாலும் கற்பனைகளாலும் தான்.

ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.

நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்திற்கு எல்லோருடைய சம்மதத்தையும் ஒருபோதும் பெறமுடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்

நான் வளர்கிறேனா அல்லது வாடுகிறேனா என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் ஆனந்தமாக வளர்ந்து வாழ்கிறீர்களா அல்லது துன்பத்தில் தளர்ந்து தடுமாறுகிறீர்களா என்பதைப் பற்றிய நிலையை நினைவு கூறுங்கள்.

ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். ஆனால் அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

கடைசி கணம் வரை நீங்கள் ஆனந்தமாய் வாழ்ந்தால், மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதுவும் ஆனந்தமானதாகவே அமையும்.

வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

எனக்கு துன்பம் நேருமோ எனும் அச்சத்திலிருந்து விடுபடும்போது, வாழ்வை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்குள் இயல்பாகவே எழும்.

நீங்கள் இரு வழிகளில் விரிவடைய முடியும் – ஒன்று அடக்குமுறை, மற்றொன்று அரவணைத்தல். ஒன்று துன்பம் தரும், மற்றொன்று இன்பம் தரும்.

மக்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயன்றால், வலியே மிஞ்சும்.

பயம், கோபம், வருத்தம், மன அழுத்தம் ஆகியவை உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் விஷங்கள். உங்கள் மனதை உங்கள் ஆளுமையில் எடுத்து வந்தால், பேரானந்தத்தை நீங்கள் உருவாக்க முடியும்

பஞ்சபூதங்கள் உங்களுக்குள் செயல்படும் விதத்தைப் பொருத்தே உடல்நலம்-உடல்நலக்கேடு, அமைதி-குழப்பம், சந்தோஷம்-துயரம் போன்றவை நிகழும்.

வெளி சூழ்நிலைகள் உங்களுக்கு உடல் சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், ஆனால் துயரம் உங்கள் மனத்தின் உருவாக்கமே.

உலகின் ஒரு சதவிகித மக்கள் உறுதியுடன் எழுந்து நின்றாலும்கூட போதும், உலகின் பொருள்நிலையிலான வேதனையை முற்றிலுமாக நம்மால் துடைத்துவிட முடியும்

ஒரு துளி அன்பை தந்து விட்டு,

பல துளி கண்ணீரை

கறந்து விடுகிறது.

போலியான சில உறவுகள்…!

வலி கண்ணீரில் மட்டுமே

இருப்பதில்லை. சில நேரம்

சிரிப்பிலும் மறைந்திருக்கும்.

எட்டி உதைக்கிறது காலம், எட்டி

பார்க்கிறது துயரம். திடீரென வலிக்கிறது.

வலியை மறைத்து ஒரு நொடி சிரித்தால்,

அடுத்த நொடி வந்து விடுகிறது சோதனை.

என்னடா வாழ்க்கை இது…!

வெளியே காண்பிக்க முடியாத

காயங்கள் ஏராளம் என்னுள்.

அழுது தீர்ப்பதா இல்லை,

அனுஅனுவாக அனுபவித்து சாவதா.

வெளியே சிரிப்பது

தெரிந்தவர்களுக்கு.

உள்ளே சிதைபட்டு

சிறைபட்டு கிடப்பது

தெரியவில்லை ஏனோ…!

என் பாதைகள் எல்லாம்,

கண்ணீர் நிரம்பியவை.

என் கவிதைகள் எல்லாம்,

சோகம் ததும்பியவை.

நான் இனி வாழ வேண்டியது,

கல்லறை செல்லும் வரை.

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here