Success Quotes in Tamil

0
371

அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன கோழையை தற்கொலை செய்ய வைக்கிறது வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது

நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும் சாதித்து கொண்டே இரு வாழ்வில்

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்

எட்ட முடியாத வானம் கூட உயரமில்லை நீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கையின் முன்னால்

ஆசை நிராசையாகலாம் லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம் பயிற்சியில் குறையிருக்கலாம் முயற்சியில் தோல்வியடையலாம் ஆனால் ஆசைப்பட்ட லட்சியங்களை அடைய நீ செய்யும் பயிற்சியும் அதில் வெற்றியடைய நீ செய்யும் முயற்சியையும் கை விடக்கூடாது என்ற தன்னம்பிக்கை மட்டும் இழந்து விடாதே வெற்றி உன் காலடியில் என்பதை மறவாதே

மலையைப் பார்த்து மலைத்து விடாதே மலை மீதேறினால் மலையும் உன் காலடியில் முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே

எங்கு நீங்கள் தவிர்க்கபட்டீர்களோ அவமானம் செய்யப் பட்டீர்களோ அங்கு நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பது தான் உண்மையான வெற்றி

பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டே இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்

மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை காட்டுபவனே சிறந்த தன்னம்பிக்கையாளன்

நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி

நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

தடைகள் ஆயிரம் வந்தால் என்ன அடியெடுத்து வைத்து முன்னேறி விடு வாழ்க்கை வசப்படும்

எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் கலங்கி நின்று நேரத்தை விரயமாக்காமல் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே வெற்றியை நிலை நாட்ட முடியும்

எதிலும் பயம் அறியாமல் முற்றிலும் தன் திறமையை கொண்டு விவேகமாக செயல் பட தெரிந்தவனே எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருந்து வெற்றிகளை பறிக்கின்றான் எப்போதும் தன்னால் முடியும் என்று முந்துபவற்கே முதல் பரிசு

காலம் பதில் அளிக்கும் என்று கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை சொல்லி நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை துணிந்து செல்பவனுக்கு எப்போதும் வெற்றி தான்

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

நீயும் பின்தொடராதே

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு…


எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

என்னை கை விடாது


இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

கனவுகள் ???? முளைப்பது இருளில் தான்


சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை

விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

மலரும்…


ஒளியாக நீயிருப்பதால்

இருளைபற்றிய கவலை எனக்கில்லை…


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…

சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…


நம்மை அவமானப்படுத்தும் போது

அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்

அடுத்த நொடியில் இருந்துதான்

நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…


துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…


தனித்து போராடி கரைசேர்ந்த பின்

திமிராய் இருப்பதில் தப்பில்லையே


எப்போதும் என்

அடையாளத்தை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டேன்


முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்

வலிகளும் பழகிப்போகும்…


அடுத்தவரோடு ஒப்பிட்டு

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…


பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு..


வேதனைகளை ஜெயித்துவிட்டால்

அதுவே ஒரு சாதனைதான்…


உன்னால் முடியும்

என்று நம்பு…

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே…


எந்த சூழ்நிலையையும்

எதிர்த்து நிற்கலாம்

தன்னம்பிக்கையும் துணிச்சலும்

இருந்தால்……


குறி தவறினாலும்

உன் முயற்சி

அடுத்த வெற்றிக்கான

பயிற்சி……


ஒரு நாள்

விடிவுகாலம் வரும்

என்றநம்பிக்கையில் தான்

அனைவரின் வாழ்க்கையும்

நகர்ந்துக்கொண்டிருக்கு…


தோல்வி உன்னை துரத்தினால்

நீ வெற்றியை

நோக்கி ஓடு


உறவுகள்

தூக்கியெறிந்தால்

வருந்தாதே

வாழ்ந்துக்காட்டு

உன்னை தேடிவருமளவுக்கு…


எல்லாம் தெரியும் என்பவர்களை விட

என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே

வாழ்வில் ஜெயிக்கின்றார்…


நமக்கு நாமே

ஆறுதல் கூறும்

மன தைரியம்

இருந்தால்

அனைத்தையும் கடந்து போகலாம்…


முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்ததை

முடிக்கும் வரை…


புகழை மறந்தாலும்

நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை

நீ அவமானப்படாமல் காப்பாற்றும்


தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்

நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்

ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…

தன்னம்பிக்கை இருக்கும்

அளவுக்கு முயற்சியும்

இருந்தால் தான் வெற்றி

சாத்தியம்…


எல்லோரிடமும் உதைபடும்

கால்பந்தாய் இருக்காதே

சுவரில் எறிந்தால்

திரும்பிவந்து முகத்தில்

அடிக்கும் கைபந்தாயிரு…


எண்ணங்களிலுள்ள தாழ்வு

மனப்பான்மையால் திறமைக்கு

தடை போடாதீர்கள்….

முடியும் என்ற சொல்லே

மந்திரமாய்….

( நம்பிக்கை )


மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,

தோல்வி பல கடந்து வென்றவர்களே…


தனியே நின்றாலும்

தன் மானத்தோடு…

சுமையான பயணமும்

சுகமாக….

(நம்பிக்கை)


எனக்கு பிரச்சினை என்று

ஒரு போதும் சொல்லாதீர்கள்

பிரச்சனை என்றால்

பயமும் கவலையும் வந்து விடும்

எனக்கு ஒரு சவால்

என்று சொல்லி பாருங்கள்

தைரியமும் தன்னம்பிக்கையும்

தானாக வந்து விடும்…


தோல்விகளை

தவழும் போது,

ஏமாற்றமென

நினையாமல்

மாற்றமென

நினையுங்கள்…

பாதிப்பு

இருக்காது…

உங்களுக்கும்

மனதிற்க்கும்…

இதுவும் கடந்து போகும்


ஒவ்வொரு நாளும்

வெற்றி பயணத்தை

தொடங்கிவிட்டேன் என்று

முதலடி எடுத்து வை


வெற்றிபெறும் நேரத்தைவிட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும்

வாழும் நேரமே

நாம் பெறும்

பெரிய வெற்றி


தேவைகளுக்கான தேடலும்,

மாற்றத்திற்க்கான முயற்சியும்,

வாழ்க்கைக்கான யுக்தியும்,

உன்னால் மட்டுமே

உருவாக்க முடியும்…

(தெளிவும்-நம்பிக்கையும்)


எதிரி இல்லை

என்றால்

நீ இன்னும்

இலக்கை நோக்கி

பயனிக்கவில்லை

என்று அர்த்தம்


அனுபவம் இருந்தால்

தான் செய்ய முடியும்

என்பது எல்லா

வற்றுக்கும் பொருந்தாது

முதன் முதலில்

தொடங்க

படுவதுதன்னம்பிக்கை

சம்பந்தப்பட்டது…


நம்பிக்கையின் திறவுகோல்

தன்ன(ந)ம்பிக்கையே


மனதில் உறுதியிருந்தால்

வாழ்க்கையும்

உயரும் கோபுரமாக…


முயற்சி தோல்வியில்

முடிந்தாலும்

செய்த பயிற்சியின்

மதிப்பு குறையாது


விழுந்தால் எழுவேன்

என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்

யாரையும் நம்பிஏறகூடாது

வாழ்க்கையெனும் ஏணியில்…


வாய்ப்புகள் நம்மை

கடந்து சென்றாலும்

தொடர்ந்து முயற்சியுடன்

பின் தொடர்ந்தால்

திரும்பி பார்க்கும்

நாம் விரும்பிய படியே…

(நம்பிக்கையுடன்)


உன்னையே நீ நம்பு

ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!


வியர்வை துளியை

அதிகப்படுத்து

வெற்றி வந்தடையும்

வெகு விரைவில்

(உழைப்பே – உயர்வு)

Related Post: Anbu Kavithai in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here