Anbu Quotes in Tamil

0
340

மண்ணில்

பூத்த பூக்கள்

தான் உதிரும்

நம் மனதில்

பூத்து நட்புக்கள்

என்றும் உதிர்வதில்லை…


மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்

கோபத்தில் உள்ள அன்பையும்

யாரால்

உணர முடிகிறதோ

அவர்களே

நமக்கு கிடைத்த

உன்னதமான உறவு


நமக்காக வாழ்கின்றவர்கள்

நம்மிடம் எதிர்பார்ப்பது

நம் சந்தோஷத்தை மட்டுமே…


வெளிப்படுத்த தெரியாத

அன்பு கூட

பேரன்பு தானே…


பிடிக்காதவரை

நேசிக்க தொடங்கிவிட்டால்

இனி பிரிவுக்கே

இடமில்லை…


அன்புடன் பேசுங்கள்

அது உங்களை

அழகாக்கும்…


கிடைக்கும் என்பதில்

பிரச்சனை இல்லை

ஆனால் நிலைக்குமா

என்பதில்

தான் பிரச்சனை

(அன்பு)


நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்????

நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்????

அதீத அன்பு மட்டுமே காரணம்????

அந்த தருணங்கள் பேரழகு????


அருகில் இருப்பதால்

அன்பு அதிகரிப்பதும் இல்லை

தொலைவில் இருப்பதால்

அன்பு குறைவதுமில்லை


சிலரை விட்டு

விலக முடிவதில்லை

காரணம் உலகமாய் நினைத்து

வாழ்ந்து விட்டதாலும்

உயிர் கூட உடலை விட்டு

பிரிய மறுப்பதில்லை


அன்பு என்பது

ஒரு சிறந்த பரிசு

அதை பெற்றாலும்

கொடுத்தாலும்

சந்தோஷமே…!


நம்

அன்பு ராச்சியத்தை

ஆட்சி செய்ய

கால் பதிக்கின்றாள்

குட்டி தேவதை


அன்புக்காக

ஏங்கி தேடாதீர்கள்

அன்புக்காக ஏங்குபவரை

தேடுங்கள்…!


நிலையான அன்புக்கு

பிரிவில்லை ????

சொல்லாத சொல்லுக்கு

அர்த்தமில்லை

தேடும் பாசத்திற்கு

தோல்வி இல்லை ????

உண்மையான

என் அன்புக்கு

மரணம் இல்லை ????????????


அக்கறையுடன் கேட்பதற்கு

பதில் சொல்வதே

அன்பின் வெளிப்பாடு…!


பிறர் அழகில்

மயங்காதே

அழகு கிடைப்பது

சந்தோசம் அல்ல

அன்புல்லம்கிடைப்பதுதான்

உன்மையான சந்தோசம்


நம்மிடம்

ஒன்றுமே இல்லாவிட்டாலும்

தர்மம் செய்ய

ஒன்றே ஒன்று

அளவற்றதாக உள்ளது

அது அன்பு


அன்புக்கு நிகரானது

எதுவும் இல்லை

பாசத்துக்கு கட்டுப்படாத

மனிதர்கள் யாரும் இல்லை

உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்

என்றுமே பிரிவு

என்பது கிடையாது


அன்பு

எனும் விதை

தரமாக இருந்தால்

நட்பு

எனும் கனிகள்

சுவையாக கிடைக்கும்


உண்மையான அன்புக்கு

முகங்கள் தேவையில்லை

முகவரியும் தேவையில்லை

நம்மை நினைக்கும்

உண்மையான நினைவுகள்

மட்டுமே போதும்


காலங்கள் சிலரை

மறக்க செய்துவிடும்

ஆனால்

ஒரு சிலரின்

அன்பு காலத்தையே

மறக்க செய்துவிடும்


உண்மையான

அன்புகள்

நம்மை சுற்றி

இருக்கும் போது

நாம் யாரும்

தனி நபர் இல்லை


அன்பு மட்டும் தான்

உலகில் நிரந்தரமானது

அதை உண்மையாக்குவதும்

பொய்யாக்குவதும்

நாம் நேசிப்பவரிடம்

மட்டுமே உள்ளது


அன்பை மட்டும்

பகிர்ந்து கொண்டே இரு

ஏனொன்றால் அன்பின்

ஊற்று மட்டுமே என்றுமே

வற்றாத ஜீவநதி


அடங்கிப்போவதும்

அடிபணிவதும்

உன் அன்பிற்க்கு

மட்டுமே


சில பேர்

நமக்காக நிறைய

செய்வாங்க பட்

ஒன்னும் பண்ணாத

மாதிரி காட்டிப்பாங்க

அந்த அன்பு

என்ன விலை

கொடுத்தாலும்

வாங்க முடியாது


அன்பு என்பது

போர் செய்வது போன்றது

துவங்குவது சுலபம்

நிறுத்துவது கடினம்


அன்பு எனும்

எழுது கோலால்

மட்டுமே

வாழ்க்கை எனும்

பக்கங்களை

அழகாக்க முடியும்


உடைத்தெரிய

ஆயிரம் இருக்க

உயிர்த்தெழ ஏதாவது

ஒரு காரணத்தை

வைத்திருக்கிறது அன்பு


இப்பிரபஞ்சத்தின்

ஒற்றை நம்பிக்கையும்

ஒற்றைப் பேராசையும்

அன்பு மட்டும் தான்


எதிர்பார்ப்பு

இன்றி கிடைக்கும்

அன்பு பெருமழைக்கு ஈடானது


இன்பம் மட்டும் கூட்டி

இதய இராகம் மீட்டி

எந்த நிலையின் போதும்

மாறா அன்பை

மட்டும் ஊட்டி

வாழ வேண்டும்

அன்பான இதயங்களில்


பணவீக்கத்தை கட்டுப்படுத்த

பணத்தினை சேமியுங்கள்

மனவீக்கத்தை கட்டுப்படுத்த

அன்பினை செலவு செய்யுங்கள்


அன்பான உறவுகளின்

காயங்களுக்கு மருந்தாகவே

பயன்படுகிறது பாசம்


கொஞ்சம் அன்பு

கொஞ்சம் அக்கறை

பூர்த்தியாகும்

இப்பேரின்ப பெருவாழ்வு


கோபமும் ஒரு வகை

அன்பு தான்

அதை அனைவரிடமும்

காட்ட முடியாது

நெருங்கியவரிடம் மட்டுமே

காட்ட முடியும்


அறிவாக

பேசுபவர்களை விட

அன்பாக

பேசுபவர்களிடமே மனம்

அதிகமாக

பேச விரும்புகிறது


ஒரு குறிப்பிட்ட

காலத்திற்கு பிறகு

நாம் சிரிக்க வேண்டுமா

அல்லது அழ வேண்டுமா

என்ற முடிவெடுக்க

நாம் அன்பு வைத்தவர்களால்

மட்டுமே சாத்தியமாகிறது


மனதால் எவ்வளவு

பலமானவர்களையும்

அழ வைக்கும் ஒரே

ஆயுதம் உண்மையான

அன்பு மட்டுமே


உரிமையோடு

சண்டை போட்டு

கோபபடுறவங்க

மனசுல தான் ஆழமான

அன்பு அழியாமல்

இருக்கும்


அன்பு என்பது

ஒரு அழகிய உணர்வு

அதை அலட்சியபடுத்துபவர்களிடம்

காட்டி வீணடிக்காதீர்கள்

அழகாய் கொண்டாடி

தீர்ப்பவர்களிடம் காட்டுங்கள்


சிலரின்

உண்மையான அன்பால்

தவறுகள் கூட

மன்னிக்கப்படுகிறது


சொற்களில் முரண்பாடு

ஏற்பட்டாலும்

உன் மேல்

நான் கொண்ட

அன்பு மட்டும் மாறாது


கொடுப்பதிலும்

பெறுவதிலும்

கஞ்சத்தனம் வேண்டாமே

(அன்பு)


உலகில் எதிர்பார்பில்லாத

அன்பு கிடைப்பது வரம்

அதை உன்னிடம் கண்டேனே


அன்பால்

அழகு செய்

எவர் தடுத்தாலும்

மறையாது பேரன்பு


அன்பு ஒருபோதும்

அனாதையில்லை

எங்கோ எவரோ

யாரோ யாருக்கோ

எதையும் எதிர்பார்க்காமல்

அள்ளி கொடுத்துக்கொண்டுதான்

இருக்கின்றார்கள்

அளவில்லா அன்பை


அதிகமான அன்பு வச்சா

அன்பானவர்களுக்கு

தொல்ல கொடுக்க தான்

தோணுது


எல்லோர் இதயமும்

மென்மையானது தான்

அன்பால் கடினமானவர்களை

கூட மாற்ற முடியும்

அவர்களை அணுகும் வழி

தெரிந்தால்


பழகிய இருவரை

அன்பால் இணைத்தால்

அது அன்பின் வெற்றி

ஆக முடியாது

இருவரும் மனதால்

புரிந்து இறுதி வரை இணைந்து

அந்த உறவை தக்க வைத்துக்கொள்ளவதே

அன்பின் வெற்றியாகும்


கொடுக்கின்ற அன்பு

தான் திரும்ப கிடைக்கும்

பெறுகின்ற அன்பு தான்

இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது


பேராசை முடிகின்ற இடத்தில்

மகிழ்ச்சி தொடங்குகிறது

புன்னகை தொடங்கும் இடத்தில்

வாழ்க்கை தொடர்கிறது

அன்பு இருக்கும் இடத்தில்

அனைத்தும் கிடைக்கிறது


உலகில் நிலையானது

பணமோ பொருளோ

அல்ல

நம்பிக்கை நிறைந்த

அன்பு மட்டுமே


அன்பு எப்படிபட்டது என்று

தள்ளிப்போகும் போது தான்

புரியத் தொடங்கும்


உருவமில்லாத ஒன்று

உலகையே ஆளுகிறது

என்றால்

அது ஒருவர் மீது வைக்கும்

உண்மையான

அன்பாக தான்

இருக்க முடியும்


அன்பெனும் பிடிக்குள்

அகிலமே அகப்படும்

ஆயுள்கைதியாய்

விடுதலைபெற

விருப்பமேயின்றி

நீ மட்டும்

விதிவிலக்கா என்ன


புரிதல் என்பது

அன்பானவர்களின்

புன்னகையையும் மனதையும்

அறிவதிலும் தான் உள்ளது


உண்மையான

அன்பு என்பது

வார்த்தைகளால்

விவரிக்க இயலாதது

அது உணர்ச்சிகளாலும்

எண்ணங்களாலும்

செயலாலும் உணர்த்தப்படுவது


அகிலம் முழுவதும்

அனைவரின் தேடலும்

அன்னைக்கு நிகரான அன்பு

செலுத்துபவரை மட்டுமே


பெரும் துயரத்தையும்

கடத்தி விடும் சிறு பாலம்

நம்மீது அன்பு

கொண்டவர்களின் புன்னகை


அன்பையும்

மகிழ்ச்சியையும்

அடுத்தவரிடம்

எதிர்பார்ப்பதைக் காட்டிலும்

வழங்குபவராக இருக்க முனையுங்கள்

இரட்டிப்பாக கிடைக்கவும் வாய்ப்புண்டு


அன்பும் பாசமும்

விலை பொருள் அல்ல

மனதிற்கு பிடித்தவர்கள் மேல்

வரும் அழகான உணர்வு

உணர்வுகளை மதிப்போம்

உணர்வுகளுக்கு

உயிர் கொடுப்போம்


அன்பு இருக்கும்

உள்ளம் எப்போதும்

அமைதியுடன் இருக்கும்

அன்பு மட்டுமே

யாரையும் காயப்படுத்தாத

அனைவரையும்

வீழ்த்தக் கூடிய ஆயுதம்


அன்பு

என்ற ஒற்றை மந்திரம்

உள்ளத்தில் இருக்கும் வரை

வாழ்க்கைப் பயணம்

பயமுமில்லை பாரமுமில்லை


வார்த்தைகள் வெளிப்படுத்தாத

அன்பையும்

புன்னகை வெளிப்படுத்தி

விடுகிறது


நான் தேடி

போகும் முன்

என்னை தேடி

வரும் அன்பு

ஒன்றே போதும்

வாழ்ந்து விடுவேன்

வாழ்க்கையை(யே)


ஒருவரிடம் இருந்து

கிடைக்கும் அன்பு

இறுதி வரை

கிடைக்குமாயின்

அது உறவு

அல்ல வரம்


நாம சிரிச்சா நம்ம கூட

சேர்ந்து சிரிக்கிறதும்

அழுதா ஆறுதல் சொல்லும்

உறவு என்றுமே

அழகனாதா இருக்கும்


தோற்றும் போகலாம்

உண்மையான அன்பில்

ஆனால் ஒருபோதும்

ஏமாந்து போகக்கூடாத

பொய்யான அன்பில்


அன்பைக் காட்டுவதற்கு

மட்டுமல்ல

கோபத்தைக் கொட்டுவதற்கும்

பிரியமானவர்கள்

தேவைப்படுகிறார்கள்


பிடித்தவரிடத்தில்

குழந்தையாய்

மாறி போவது

எல்லாம்

பேரன்பில் மட்டுமே

சாத்தியம்


அழகாய் பேசும்

பல வரிகளை விட

அன்பாய் பேசும்

ஒற்றை வரிக்கே

உணர்வுகள் அதிகம்


உரிமை எடுத்துக்கொண்டு

நம்மிடம்

கோபம் கொள்ளும் உறவுகள்

எளிதில் எல்லோருக்கும்

அமைவது இல்லை


அவ்வளவு அன்பையும்

மறக்க வைக்கும் கோபம்

எவ்வளவு கோபத்தையும்

மறக்க வைக்கும் அன்பு


ஒன்றை தொலைப்பதற்கும்

ஒன்றில் தொலைவதற்கும்

பெரிதான காரணங்கள்

ஏதும் இருந்திடாது

அன்பை தவிர


அன்பு என்பது

குறையாது என்பதற்காக

குறையில்லாமல் கொடுக்காதே

குறையாகி விடும்

குறை சொல்வதற்காகவே


ஒருவரின் அன்பு

நம்மை

பலப்படுத்தவும் முடியும்

பலவீனமாக்கவும் முடியும்

அன்பை பலப்படுத்த மட்டுமே

முயலுங்கள்

அன்பான உறவுகள் அமைய

வழி வகை செய்யுங்கள்


வெறும்

அன்பை மட்டும்

பரிமாறுதல் உறவல்ல

உண்மையோடும்

நம்பிக்கையோடும்

அரவணைப்போடும்

ஒருவருக்கொருவர்

துரோகம் நினைக்காமல்

நேசங்களை

பரிமாறுவதே நல்லன்பு


ஆயிரம் புரிதல்கள்

இருந்தாலும்

சில சறுக்கல்களும்

வந்து போகிறது

நம் அளவு கடந்த

அன்பிற்கு சவாலாக


ஆயிரம் போராட்டங்களையும்

சவால்களையும் வென்றுவிடும்

மனமானது அன்பு என்ற

புள்ளியில் ஒருவரிடத்திலாவது

தோற்றுக் கொண்டே தான்

இருக்கிறது


மாற்றம்

எதில் வந்தாலும்

என்றும் மாறாதது

நமதான நேசமும்

அன்பும்


நாம் நேசித்தவர்கள்

நம்முடன் இல்லையென்றாலும்

நலமாக வாழ்ந்தால் போதும்

என்று நினைப்பதே

உண்மையான அன்பு


ஆயிரம் பேர்

உன்னை

வெறுத்தால் என்ன

உண்மையான

ஒருவர் வைக்கும்

அன்பு போதும்


வேண்டும் எனும் போது

உடன் இருப்பது மட்டும்

அன்பு அல்ல

வேண்டாம் எனும்போது

விலகி இருப்பதும்

அன்பு தான்


கிடைக்க கிடைக்க

திகட்டாத ஒன்று

நாம் நேசிக்கும்

ஒருவரின் அன்பு


நம்மை நேசிக்கும்

அன்பான உறவுக்காக

நீண்ட கால

ஆசையை விருப்பத்தை

விட்டு கொடுப்பதெல்லாம்

பாசத்தின் வெளிப்பாடே


கிடைக்கும் போது

பெற தவறினால்

நாம் தேடும் போது

கிடைக்காது

உண்மையான உறவுகளின்

தூய அன்பு


ஈகோவினால் ஒன்றும்

சாதிக்க போவதில்லை

என்பதை அளவுக்கடந்த

பாசமே

புரிய வைத்து விடுகிறது


கோபத்தில்

ஏழையாக இரு

அன்பில்

பணக்ககாரனாக இரு

வாழ்க்கை சிறக்கும்


பேசிக்கொண்டே

இருக்கும்

உறவுகளை விட

நினைத்துக்கொண்டே

இருக்கும்

உறவுகளுக்குத் தான்

அன்பும் ஆயுளும் அதிகம்


கண்கள் தான் இருந்தும்

பார்க்க முடியாமல்

தானே இருக்க முடிகிறது

அன்புக்கு நிகரான

உண்மை முகங்களை


கேளுங்கள்

கொடுக்கப்படும்

என்று சொல்லும் உலகில்

கேட்காமலே

அன்பை அள்ளித் தரும்

உறவுகள் அமைய

பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்


அனைத்தையும் நேசிக்கச் செய்வதும்

அன்புதான்

அனைத்தையும் வெறுக்கச் செய்வதும்

அன்புதான்

அன்பு எதுவும் செய்யும


நேற்றைய நினைவுகளையும்

நாளைய கனவுகளையும்

இன்றைய நொடிகளை

தீர்மானிப்பதில்லை

அன்பை பரப்பு

ஆதரவு கிடைக்கும்


புரிதல் என்பது

அன்பினால்

வருவது அல்ல

அனுபவத்தில் வருவதே


தேடி வரும் அன்பை

அலட்சியப்படுத்தாமல்

ஏற்றுக்கொள்ளுங்கள்

அவர்களை விட யாரும்

உண்மையாக

நேசிக்க முடியாது


உங்கள் அன்பும்

நீங்கள் தரும்

முக்கியத்துவமுமே

உங்களை நேசிக்க

வைக்கக் கூடும்


அன்பானவர்களிடம்

எதிர்பார்ப்பது

ஒன்று மட்டுமே

இன்பமோ துன்பமோ

உண்மையாய் இரு

அதுவே போதுமானது


எந்த ஒரு

எதிர்பார்ப்பும் இல்லாமல்

நம்மை புரிந்து

கொண்டவர்கள் தான்

நம் மீது

அதீத அன்பையும்

கோபத்தையும்

வெளிப்படுத்துவார்கள்


அழகு என்பது

வயது உள்ள வரை

அன்பு என்பது

உயிர் உள்ளவரை


அன்பு புரிஞ்சு

உணரக் கூடியது

புரியவச்சோ நிரூபிச்சோ

உணரக் கூடியது இல்லை


யாருக்காகவோ

காத்திருப்பதை விட

நமக்காக

காத்திருப்பவரின்

அன்பை

ஏற்றுக் கொள்ளலாம்


உங்களை பலவீனப்படுத்தும்

யாரொருவரின் அன்பிலும்

தேங்கி விடாதீர்கள்

அதுவே பின்

மீளவே முடியாத

ஒரு போதையாகிவிடும்


அடுத்த நிமிடம்

நிச்சயமில்லாத வாழ்க்கை

முடிந்தவரை யாரயும்

காயப்படுத்தாமல்

வாழக்கற்றுக் கொள்வோம்


கோபம் அடைமழையாக

கொட்டித் தீர்த்தாலும்

அன்பு அது ஒரு ஓரம்

நின்று குடை பிடிக்கும்

Related Post: Success Quotes in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here