Love kavithai Tamil

0
350

என்னை

துளைத்தெடுக்கும்

உன் நினைவுகளைவிடவா

இவ்வுலகிலோர்

கூர்மையான

ஆயுதமிருக்கபோகிறது

ஏதேதோயெழுத

நினைத்து

உன் பெயரை

எழுதிமுடித்தேன்

கவிதையாக

நீ

நலமா

எனும்போதெல்லாம்

நீயின்றி எனக்கேது

நலம் என்கிறது

மனம்…

வருவேன்

என்ற எதிர்பார்ப்பை

ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்

மழையைபோல்…

காயங்களும்

மாயமாகும்

என்னருகில்

நீயிருந்தால்

உன் நினைவுகளை

மீட்டியே

வீணை வாசிக்கவும்

கற்றுக்கொண்டேன்

நெற்றியில்

திலகமிட்டுக்கொள்ள

வரம் தந்தவனுக்கு

அன்பு பரிசாய்

அவன் நெற்றிக்கொரு

இதழில் திலகம்

நாம் இமைக்காமல்

பார்த்துக்கொண்ட

நொடிகளில்

நம் இதயங்களும்

இடம்மாறிக்கொண்டது

சாலையோர

நடைப்பயிற்சியில்

காலைநேர

தென்றலாய் நீ…

விட்டுச்சென்ற

இடத்திலேயே

நிலைத்துவிட்டேன்

உன் நினைவுகளிலிருந்து

விடுபடமுடியாமல்…

நாணலும்

நாணம் கொண்டு

தலைசாய்ந்தது

உன் காதல்

மொழியில்

நீ எழுதாதபோதும்

பல கவிதைகள்

ரசிக்கின்றேன்

உன் விழிகள்

சலிக்காத ரசணைகள்

தூரத்து நிலவும்

அருகில் நீயும்…!

உன்

அருகாமை போதும்

தாய்மடியாய்

நினைத்து நானுறங்க

தனிமையும்

பிடித்துப்போனது

என்னுடன்

உன் நினைவுகளும்

வந்துவிடுவதால்

தொலைவில்

உன் குரல்

கேட்டாலும்

மனமேனோ

பறக்கின்றது

பட்டாம்பூச்சாய்

ஆறுதல் கூற

ஆயிரம்பேரிருந்தாலும்

உன்

அருகாமையைபோலாகுமா

நீ பேசாத போது

பேசி மகிழ்கிறேன்

நீ பேசிய

வார்த்தைகளோடு

மனதுக்குள்

உலகம் சுழல்வது

நின்றாலும்

உன் நினைவு

என்னுள் சுழல்வது

நிற்காது அன்பே

தோஷங்கள்

இல்லாத போதும்

பரிகாரங்கள் செய்கிறேன்

நம் காதலின்

சந்தோஷத்திற்காக

பூட்டி விட்டேன்

இதயத்தை

எங்கேனும் தொலைத்துவிடு

திறவுகோலை மீண்டும்

தொலையாமலிருக்க

என்னிதயத்திலிருந்து

என்னவன்

எங்கு ஒளிந்து

கொண்டாலும்

உன் நினைவிடமிருந்து

தப்பிக்க முடிவதேயில்லை

மனதோடு மாலையாய்

எனை சூடிக்கொள்

உன் உள்ளத்தில்

உதிராத மலராய்

நானிருப்பேன்

ஒரு விழி

நீ மறு விழி

நான் இரு விழிகள்

கொண்டு

அமைப்போமொரு

காதல் உலகை

நாம் வசிக்க

என்றோ

நாம் எதார்த்தமாய்

பேசிய வார்த்தைகளில்

எல்லாம்

காதல் நிரம்பி

வழியுதே

இன்று

என் கண்களுன்னை

காணும் போது

உன் கண்ணாமூச்சி

ஆட்டத்தில்

களைத்து போனது

என் விழிகள்தான்

உனக்காய் காத்திருந்து

எந்த ஜென்மத்தில்

செய்த தவமோ

இந்த ஜென்மத்தில்

கிடைத்தாய்

நீயும் வரமாய்

என்னவனே

உனக்கான எதிர்பார்ப்பில்

இத்தனை காதலென்றால்

விலகியே இருப்பேன்

நம் காதலுக்காக

சொந்தமென்று

என்னுள்

நீ வந்த பின்னே

இனி நான் தனிமையில்

தவிர்த்து இருக்க

அவசியமில்லை

பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது.

பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது.

மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி,

கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது.

உன் அன்புக்கு அடிமையாக,

ஆசை தீரா காதலுடன்,

மோகம் குறையா காமத்துடன்

ஆயுள் வரை உன் கரம் பற்றி

வாழ்ந்திட ஆசையடி எனக்கு.

மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல்,

உன் மரண கண்களில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.

அணைப்பாயா இல்லை ஆறுதல் சொல்வாயா…?

விடை கொடுப்பாயா இல்லை விலகி செல்வாயா…?

என் கண்களில் உள்ள காதலை

நீ புரிந்து கொள்ளவில்லை தான்.

இருந்தும் என் காதல் குறையவில்லை.

காதலித்து கொண்டே இருக்கிறேன் கனவினில்.

என்னை அழகாக்க

உன் நினைவு வேண்டும்.

என் வாழ்க்கையை அழகாக்க

நீ வேண்டும்.

வருடங்கள் பல கடந்து வயதான பின்,

நீ வந்து என்னை சந்தித்தாலும்,

அறிமுகம் இன்றி அறிந்திடுவேன்

நீ தான் என்று.

உன்னை பதித்து வைக்க வில்லை

பொரித்து வைத்திருக்கிறேன் இதய சுவட்டில்

கடவுள் உன்னை யோசித்து வடித்தானோ!

இல்லை நேசித்து வடித்தானோ!

இப்படி ஒரு அழகு கவிதையை

படைத்து அனுப்பி விட்டான் எனக்காய்.

உலகத்தை பார்க்க

பயன்படும் கண்கள்,

உனக்கு மட்டும்

உலகத்தை மயக்க

பயன்படுகிறது…!

கண்களால் எனை கடத்தி சென்றாய்.

வசியம் செய்து இதயம் தின்றாய்.

என் இதயம் உன்னிடம் அகதியாய்.

நான் உன் காதலிடம் கைதியாய்.

உன் விழியின் வெளிச்சத்தில்

வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி அடி நான்.

எழுந்து விட நினைக்கும் போதெல்லாம்

மீண்டும் வீழ்ந்து போகிறேனடி.

உன் விழியழகில்…!

பேசும் உன் விழி கண்டு.

என் வாய் பேச மறந்ததடி.

ஓரிரு வார்த்தை ஏனும்

பேசி விட்டு செல்லடி.

கனவில் வந்த தேவதையே!

கனவு கலைந்த உடன் நீயும்

கலைந்து சென்றதன்

காரணம் தான் என்னவோ..!

https://beingwiki.com/wp-admin/post.php?post=42&action=edit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here